விஷால் என்னை மிரட்டுகிறார்: ஸ்ரீ ரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டு

Report Print Kabilan in பொழுதுபோக்கு
53Shares
53Shares
lankasrimarket.com

நடிகை ஸ்ரீ ரெட்டி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தி ஏமாற்றியவர்கள் குறித்து கூறிவரும் நிலையில், நடிகர் விஷால் தன்னை மிரட்டுவதாக பரபரப்பாக தெரிவித்துள்ளார்.

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக தொடர்ச்சியாக புகார்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

அதனைத் தொடர்ந்து, தமிழ் திரைப்பட உலகிலும் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திவிட்டு, வாய்ப்பு அளிக்காதவர்களின் பட்டியலை வெளியிடப்போவதாக தெரிவித்திருந்தார்.

அதன்படி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியோரது பெயர்களை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார் ஸ்ரீ ரெட்டி.

இந்நிலையில், நடிகர் விஷாலிடம் இருந்து தனக்கு மிரட்டல் வருவதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

‘தமிழ் நடிகர் விஷாலிடமிருந்து எனக்கு மிரட்டல் வருகிறது. ஆனாலும், நான் தமிழ் திரையுலகின் இருண்ட பக்கத்தில் உள்ள ரகசியங்களை வெளியிடுவேன்’ என தனது வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்