பிக்பாஸில் என் மகளை டுவிஸ்ட் பண்ணிருக்காங்க! உண்மையை உடைத்த தாடி பாலாஜி மனைவி

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய தாடி பாலாஜி மனைவி நித்யா நான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று தொடர்ந்து நச்சரித்து கொண்டிருந்ததன் காரணமாகவே என்னை வெளியேற்றிவிட்டனர் என்று கூறியுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய எலிமினேசனில் தாடி பாலாஜி மனைவி நித்யா எலிமினேட் ஆனார்.

இதையடுத்து அவர் பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், பிக்பாஸ் வீட்டில் தானும், தாடி பாலாஜியும் ஒன்றாகிவிட்டதாக கூறி என் குழந்தையிடம் சொல்லியுள்ளனர். அதுமட்டுமின்றி நாங்கள் சொன்ன மாதிரி சொன்னால் தான் அம்மாவுக்கு கெட்டப் பெயர் வராது என்று கூறியுள்ளனர்.

இதனால் அவள் வேறு வழியின்றி அவர்கள் சொன்னதை கேட்டுள்ளாள். அதிலும் நான் சொன்ன சில விஷயங்கள் கூட ஒளிபரப்பாகவில்லை. எடிட் பண்ணிருக்காங்க, பிக்பாஸ் வீட்ல நடக்குறது ஒன்னு, ஆனா தொலைக்காட்சியில் காட்டுவது ஒன்னாக இருக்கிறது.

நான் பாலாஜியுடன் பல ஆண்டுகள் வாழ்ந்து வந்திருக்கிறேன். அவருடைய குணத்தைப் பற்றி எனக்கு தெரியும், வெளியில் செல்லும் போது கூட நான் விவாகரத்திற்கான வேலையை பார்க்கிறேன் என்று தான் சொல்லி வந்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்