இயக்குநரின் மீது தோசைக்கல்லை தூக்கி வீசிய நடிகை: நெற்றி கிழிந்ததால் பரபரப்பு

Report Print Kabilan in பொழுதுபோக்கு

நடிகை அஞ்சலி படப்பிடிப்பின் போது தூக்கி வீசிய தோசைக்கல் எதிர்பாராதவிதமாக இயக்குநரின் மீது பட்டதில், அவருக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்கத்தில் ‘லிசா’ எனும் பேய் படத்தில் நடிகை அஞ்சலி நடித்து வருகிறார். இந்த திரைப்படம் இந்தியாவிலேயே முதல் முறையாக 3D டெக்னாலஜி ஸ்டீரியோ ஸ்கோப்பில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே நேற்று நடைபெற்றது. கதைப்படி, நடிகை அஞ்சலி தோசைக்கல்லை கமிராவின் முன் வீச வேண்டும். ஆனால், அவர் தோசைக்கல்லை மெதுவாக வீசுவதற்கு பதிலாக வேகமாக வீசிவிட்டார்.

இதனை இயக்குநர் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில், அவரது நெற்றியின் மீது பட்டது. இதனால், நெற்றி கிழிந்து ரத்தம் கொட்டியது. அதனைத் தொடர்ந்து, படக்குழுவினர் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்திவிட்டு இயக்குநரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவருக்கு தையல் போடப்பட்டது. அதன் பின்னர், நடிகை அஞ்சலி தனது தவறுக்கு இயக்குநரிடம் மன்னிப்பு கோரினார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்