திறமையை நிரூபித்து காட்டு: ஸ்ரீ ரெட்டிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் சவால்!

Report Print Vijay Amburore in பொழுதுபோக்கு

தன் மீது பாலியல் புகார் தெரிவித்த நடிகை ஸ்ரீதேவி, ஊடக நண்பர்கள் முன்பு அவரது திறமையை நிரூபித்து காட்டட்டும். நான் உடனே அவருக்கு பட வாய்ப்பு அளிக்கிறேன் என சவால் விடுத்துள்ளார்.

சமீபகாலாமாக தமிழ், தெலுங்கு திரையுலகினை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வரும் நடிகர் ஸ்ரீரெட்டி, தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறிவிட்டு, தன்னை மட்டும் பயன்படுத்த ஏமாற்றி விட்டதாக தமிழில் பிரபல இயக்குநர்களான ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி., நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் ராகவா லாரன்ஸ் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஸ்ரீரெட்டியின் புகாருக்கு மறுப்பு தெரிவித்து நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில், ஸ்ரீ ரெட்டி விவகாரம் தொடர்பாக சில விளக்கங்களை அளிக்க நினைக்கிறேன். இது ஒன்றும் எனக்கு பெரிய பிரச்சினை இல்லை. இதை பற்றி நான் கவலைப்படவும் இல்லை. ஆனால் மீடியா நண்பர்கள் என்னை தொடர்புகொண்டு இது பற்றி விளக்கம் கேட்ட வண்ணம் இருப்பதால் தான் தற்போது விளக்கம் அளிக்க நினைக்கிறேன்.

தெலுங்கு 'ரெபல்' படத்தின் ஷூட்டிங்கின் போது தான் என்னை சந்தித்ததாக ஸ்ரீ ரெட்டி கூறுகிறார். அது நடந்தது ஏழு வருடங்களுக்கு முன்பு. அப்போதே இது பற்றி பேசாமல் இருந்துவிட்டு, இப்போது ஏன் அவர் இதை சொல்கிறார். சரி அதையும் விட்டுவிடலாம்.

எனது ஓட்டல் அறைக்கு வந்ததாகவும், அவரை நான் தவறாக பயன்படுத்திக்கொண்டேன் என்றும் ஸ்ரீ ரெட்டி கூறுகிறார். மேலும் எனது ஓட்டல் அறையில், சாமி படங்களும், ருத்ராக்ஷ மாலையும் இருந்ததாக அவர் கூறியுள்ளார். ஓட்டல் அறையில் ருத்ராட்ச மாலையை வைத்து பூஜை செய்யும் அளவுக்கு நான் என்ன முட்டாளா?

நான் ஸ்ரீ ரெட்டிக்கு நேரடியாகவே சொல்கிறேன். நான் எந்த தவறும் செய்யவில்லை. என்னை பற்றி எனக்கு தெரியும். கடவுளுக்கு தெரியும். இத்தனைக்கு பிறகும் அவர் மீது எனக்கு கோபம் இல்லை.

ஸ்ரீ ரெட்டியின் பேட்டிகளை நான் பார்த்தேன். அவரை நினைத்து நான் பரிதாபப்படுகிறேன். உண்மையில் அவருடைய பிரச்சினை தான் என்ன? நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி எல்லோரும் அவரை ஏமாற்றிவிட்டார்கள் என்பது தானே.

தான் ஒரு நல்ல நடிகை என ஸ்ரீ ரெட்டி கூறுகிறார். நாம் ஒன்று செய்வோம். நாம் இருவரும் சேர்ந்து ஊடகத்தினரை சந்திப்போம். அவர்கள் முன்பு நான் உங்களுக்கு ஒரு சீனும், சில டான்ஸ் ஸ்டெப்புகளும் தருகிறேன். நான் ஆடும் அளவுக்கு கடினமான ஸ்டெப்புகளை தரமாட்டேன். அந்த சீனுக்கு தகுந்த மாதிரி ஸ்ரீ ரெட்டி நடித்தும், ஆடியும் காட்டட்டும். உண்மையிலேயே அது நன்றாக இருந்தால், அந்த இடத்திலேயே வைத்து எனது அடுத்த படத்துக்கான அவரை ஒப்பந்தம் செய்து முன்பணம் தருகிறேன்.

நான் எந்த தவறும் செய்யவில்லை. எனவே அவரை சந்திப்பதில் எனக்கு பயமோ, தயக்கமோ இல்லை. எனது படத்தில் நடிப்பதன் மூலம் அவருக்கு நிறைய வாய்ப்பு கிடைக்கலாம்.

எல்லோர் முன்பும் நடித்துக்காட்ட தயக்கம் இருந்தால், எனது மேலாளரை தொடர்பு கொண்டு, அவருடையே வழக்கறிஞர் மற்றும் நலம் விரும்பிகள் முன்னிலையில் தனது நடிப்பு திறனை அவர் வெளிப்படுத்தி காட்டட்டும். அதற்கும் நான் தயார் தான். அவருக்கு நான் உதவி செய்கிறேன்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers