நிச்சயதார்த்தம் செய்த பிறகு திடீரென்று திருமணத்தை நிறுத்திய பிரபல நடிகை

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகையான ராஷ்மிகா மந்தனா தனது திருமணத்தை திடீரென்று நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கன்னட நடிகை ராஷ்மிகா மந்தனாவும், கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியும் கிரிக் பார்ட்டி என்ற படத்தில் ஜோடியாக நடித்தனர்.

அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததால், திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.

இதற்கிடையில் கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா நடித்து வருகிறார்.

இந்த படத்தின் பாடல் சமீபத்தில் வெளியானது. அதில் காதல் காட்சியில் ராஷ்மிகா நெருக்கமாக நடித்து இருந்தார்.

நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு இப்படியெல்லாம் நடிக்கலாமா என்று இணையவாசிகள் அவரை சமூக வலைத்தளத்தில் கடுமையாக சீண்டினர்.

இந்த நிலையில் ராஷ்மிகா தனது திருமணத்தை திடீரென்று நிறுத்தி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் ராஷ்மிகாவின் மானேஜர் ‘திருமணம் நின்று போனதாக சொல்வது வதந்தி என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் நடிகை திரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு திருமணம் நின்று போனது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers