கருணாநிதியால் பதற்றத்தில் இருக்கும் கமல்ஹாசன்

Report Print Vijay Amburore in பொழுதுபோக்கு

விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ள நிலையில் கலைஞர் கருணாநிதியின் உடல்நல குறைவு மோசமடைந்துள்ளதால், நடிகர் கமல்ஹாசன் பதற்றத்தில் உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசியலில் மிகப்பெரிய ஆளுமையானவர் என்பதை தாண்டி, தமிழுக்கு மிகப்பெரிய தொண்டாற்றிய திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி, தற்போது உடல்நிலை குறைபாட்டால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

வயது முதிர்ச்சியின் காரணமாக உடல்நிலை தற்போது மேலும் மோசமடைந்துள்ளது. இதனால் திமுக தொண்டர்கள் பலரும் பெரும் கலக்கத்தில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் நடித்து, இயக்கியுள்ள விஸ்வருபம் படம் வரும் 10-ம் தேதி திரையரங்குகளுக்கு வர உள்ளது. ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தினை, படப்பிடிப்பின் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் நடிகர் கமல்ஹாசன் அதனை மிகப்பெரிய விலை கொடுத்து வாங்கிவிட்டார்.

படத்தில் செலவிட்ட பணத்தை எப்படியாவது திரும்ப பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில், பல்வேறு மாநிலங்களுக்கு சென்று கமல்ஹாசன் படத்தினை விளம்பரம் செய்து வருகிறார். இதுவரை இல்லாத அளவிற்கு குறைந்த நாட்களில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கமல்ஹாசன் கலந்துகொண்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் கலைஞரின் உடல்நலக்குறைவு படத்தின் வெளியீட்டை பாதித்து விடுமோ என்ற குழப்பத்தில் கமல் இருந்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக நடிகர் கமல்ஹாசன், விஸ்வரூபம் படத்தின் முதல் பாகத்தில் செலவிட்ட ரூ.90 கோடி பணத்தினை முழுமையாக எடுக்கவில்லை என விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்