பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த வைர மோதிரத்தின் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும், அமெரிக்காவைச் சேர்ந்த பாடகர் நிக் ஜோனசுவும் காதலித்து வருவதாக தொடர்ந்து கூறப்பட்டு வந்தது.

இதற்கிடையில் இவர்கள் இருவருக்கு லண்டனில் வைத்து திருமண நிச்சயதார்த்தம் முடிந்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில், தான் ஒப்ந்தமாகியுள்ள திரைப்பட படபிடிப்பிற்காக லண்டன் சென்றிருந்த பிரியங்கா லண்டனிலிருந்து சமீபத்தில் டெல்லிக்கு திரும்பினார்.

அப்போது விமான நிலையத்தில் இருந்து வெளியே வருவதற்கு முன் அவர் தன் கைவிரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி, பேன்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்தார்.

இந்த மோதிரம் அவரின் நிச்ச்யதார்த்த மோதிரமாக இருக்கலாம் எனவும், இதன் காரணமாகவே பிரியங்கா சோப்ரா, தமது விரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி மறைத்து வைத்ததாக கூறி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

ஆனால் அந்த மோதிரம் குறித்து பிரியங்கா தரப்பில் எந்த ஒரு விளக்கமும் தரவில்லை.

இந்நிலையில் தற்போது இந்த மோதிரம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது சோப்ரா-வின் நிச்சைய தார்த்த மோதிரம் என கூறப்பட்ட வைர மோதிரத்தின் விலை ரூ.1.4 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்