18 மணிநேரமாக நிலச்சரிவில்... அந்த நிமிடங்கள் கொடூரமானது! நடிகர் ஜெயராம் வெளியிட்ட உருக்கமான வீடியோ

Report Print Vijay Amburore in பொழுதுபோக்கு

நிலச்சரிவில் சிக்கி 18 மணிநேரமாக குடும்பத்துடன் தவித்தேன் என நடிகர் ஜெயராம் உருக்கமான வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

கடந்த 100 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவிற்கு கேரளாவில் கனமழை பெய்துள்ளது. இதனால் அங்கிருக்கும் 39 அணைகளும் நிரம்பியதை அடுத்து உடனடியாக 35 அணைகள் திறக்கப்பட்டன.

ஒருபுறம் அணையிலிருந்து அதிகளவிலான நீர் வெளியேறுகையில், மறுபுறம் மழையினால் ஆங்காங்கே நீர் பெருக்கெடுத்து ஓடியதால் கேரளா முழுவதுமே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.

இந்த சோக சம்பவத்தில் பொதுமக்களுடன் சேர்த்து பிரபலங்கள் பலரும் சிக்கி தவித்துள்ளார்கள். இதுதெடர்பாக ஒவ்வொரு பிரபலமும் வீடியோவினை வெளியிட்டு தங்கள் அனுபவத்தை பகிர்வதோடு, பொதுமக்களுக்கு தேவையான பொருட்கள் குறித்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் தென் இந்திய மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகர் ஜெயராம் ஒரு வீடியோ ஒன்றினை தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், சென்னையிலிருந்து என்னுடைய குடும்பத்தினருடன், கேரளா நோக்கி சென்று கொண்டிருக்கும்போது திருச்சூர் மாவட்டத்தில் குதிரன் என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் நாங்கள் அனைவரும் காருக்குளேயே சிக்கிக்கொண்டோம். எங்களுடன் இணைந்து லாரி ஓட்டுனர்கள் சிலரும் சிக்கி கொண்டனர்.

இதனையடுத்து தகவலறிந்த வடக்கன்சேரி பொலிஸார் பத்திரமாக எங்களை மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். நிலச்சரிவில் சிக்கி தவித்த அந்த 18 மணிநேரம் என் வாழக்கையில் மிகவும் கொடூரமானது என கூறியுள்ளார்.

மேலும் தற்போது வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான பொருட்களை எடுத்து செல்வதாகவும், குழந்தைகளுக்கு தேவையான பால், செர்லாக், மருந்துகள் மற்றும் நாப்கின்கள் அதிக அளவில் தேவைப்படுவதால், உதவ விருப்பமுள்ளவர்கள் உதவி செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்