பிரபல நடிகர் விவேக்-நடிகை ஜோதிகாவுக்கு தமிழக அரசு வழங்கிய மிகப் பெரிய பதவி! குவியும் பாராட்டுக்கள்

Report Print Santhan in பொழுதுபோக்கு

திரைப்பட நடிகையான ஜோதிகா கடந்த 2000-ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்தவர். அதன் பின் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பின் சில ஆண்டுகள் திரையுலகை விட்டு விலகியிருந்தார். தற்போது குழந்தைகள் பெரிதாகிவிட்டதால், ஜோதிகா தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் நடித்த 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற படங்களாக அமைந்தது.

இந்நிலையில் தமிழகத்தை பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான நல்லெண்ண தூதுவராக ஜோதிகா மற்றும் விவேக் ஆகிய இருவரையும் தமிழக முதலமைச்சர் நியமனம் செய்துள்ளார்.

இதனால் ஜோதிகா மற்றும் விவேக் இருவரும் தமிழக மக்களிடம் பிளாஸ்டிக் பற்றிய தீமைகள் குறித்து விழிபுனர்கள் ஏற்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசிடம் இருந்து இந்த மிகப்பெரிய பதவியை பெற்றுள்ள இவர்களுக்கு திரைப்பிரபலங்கள் உட்பட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...