விவாகரத்து பெற்ற பிரபல தொகுப்பாளினிக்கு இரண்டாவது திருமணம்! காதலருடன் இருக்கும் புகைப்படம்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல தனியார் தொலைக்காட்சியின் தொகுப்பாளினியான பூஜா தன்னுடைய காதலருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரபல தொகுப்பாளினியான பூஜா, களம், பீட்சா உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இதையடுத்து 2010-ஆம் ஆண்டு அதே தொலைக்காட்சியில் பணிபுரிந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார்.

அதன் பின் தான் இனி திரைப்படங்கள் நடிப்பதிலே கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பூஜா இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிவிட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது அதை உறுதி செய்யும் வகையில் காதலருடன் இவர் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை கண்ட இணையவாசிகள் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்