பாலியல் தொல்லை குறித்து நடிகை மீனா பேட்டி

Report Print Vijay Amburore in பொழுதுபோக்கு

பிரபல தென்னிந்திய நடிகை மீனா தன்னுடைய காலத்திலும், சினிமாவில் பாலியல் தொல்லை இருந்தது என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

கடந்த சில மதங்களாகவே சினிமா துறையில் நிகழ்ந்து வரும் பாலியல் தொல்லை குறித்து ஹாலிவுட் துவங்கி பாலிவுட் வரை நடிகைகள் பலரும் மனம் திறந்து வருகின்றனர்.

உச்சத்தில் இருக்கும் நடிகைகள் பலரும் வெளிப்படையாக சொல்லாமல் பூசி மொழுகினாலும், வளர்ந்து வரும் தென்னிந்திய நடிகையான ஸ்ரீரெட்டி, வெளிப்படையாக நடிகர்கள், தயாரிப்பாளர்கள் பலரின் பெயர்களையும் வெளியிட்டு பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார்.

இவரது திடீர் அதிரடியால் தென்னிந்திய சினிமா துறையே ஆட்டம் கண்டுபோய் இருக்கும் நிலையில், முன்னணி நடிகைகளும் தங்களுடைய அனுபவங்கள் குறித்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகை மீனா, தனக்கு நடிகர் அரவிந்த்சாமியுடன் நடிக்க வேண்டும் என்ற கனவு நனவாகமலேயே முடிந்துவிட்டது என வருத்தம் தெரிவித்தார்.

அதன்பின்னர் சினிமா துறையில் நடக்கும் பாலியல் தொல்லை குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், எல்லா துறைகளிலும் பெண்களுக்கு பிரச்னை உண்டு திறைமைக்கான வாய்ப்பை பெண்கள் போராடி தான் பெற வேண்டுமே தவிர எந்தவித சமரசமும் செய்ய கூடாது என கூறினார்.

மேலும் என்னுடைய காலத்திலும் பாலியல் தொல்லை இருந்தது. ஆனால் நான் அதை எதிர்கொள்ளவில்லை என தெரிவித்தார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்