என் மடியில் தான் அம்மாவோட உயிர் பிரிந்தது: கண்கலங்கும் பிரபல தமிழ் நடிகை

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகை ஜோதி லட்சுமியின் உயிர் தன்னுடைய மடியில் தான் பிரிந்தது என அவரின் மகளும், நடிகையுமான ஜோதி மீனா கூறியுள்ளார்.

தமிழ் திரைப்படங்கள் பலவற்றில் கவர்ச்சி வேடங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை ஜோதி லட்சுமி இரண்டாண்டுகளுக்கு முன்னர் ரத்த புற்றுநோயால் இறந்தார்.

ஜோதிலட்சுமியின் மகளான ஜோதி மீனா கவர்ச்சி மற்றும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் சினிமாவிலிருந்து விலகினார்.

இந்நிலையில் மீண்டும் நடிக்க வந்துள்ள ஜோதி மீனா தனது தாய் ஜோதிலட்சுமி குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறுகையில், அம்மா தனது உடல்நலத்தில் எப்போதும் கவனமாக இருப்பார்.

ஒருநாள் ஷூட்டிங் முடிச்சுட்டு வந்தவங்க, டயர்டா இருக்குனு சொன்னாங்க. அடுத்த நாளே காய்ச்சல்.

மருத்துவரான என் கணவர் அம்மாவுக்கு முதலுதவி செய்ததும் மருத்துவமனைக்கு போனோம். அப்போது தான் அவருக்கு ரத்தப் புற்றுநோய் இருப்பது தெரிந்தது.

15 நாள் சிகிச்சை முடிந்து, வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தோம். ஆனாலும் அம்மாவின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை.

ஒரு நாள் என் நைட்டியைப் உடுத்திக்க ஆசைப்பாட்டாங்க. எனக்குப் பருமனான உடல். உங்க ஒல்லி உடம்புக்கு செட் ஆகாதுமா சொன்னேன்.

அடம்பிடிச்சு என் நைட்டியை உடுத்திக்கிட்டாங்க. பாத்ரூம் போயிட்டுவந்து, என் மடியில் தலைசாய்ந்தாங்க. சில நிமிடத்தில் அவங்க உயிர் பிரிந்தது. புற்றுநோய் வந்த 20 வது நாளிலேயே அவர் வாழ்க்கை முடிந்துவிட்டது என சோகமாக கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers