பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நடிகை ஜனனி தன்னுடைய முதல் சம்பளத்தில் செய்த காரியம்! குவியும் பாராட்டு

Report Print Santhan in பொழுதுபோக்கு

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இதனால் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்குகளும் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல முறை நாமினேஷன் ஆனவர் தான் நடிகை ஜனனி, ஆனால் மக்களால் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகிறார்.

ரசிகர்கள் மத்தியிலும் ஜனனிக்கு நல்ல இடம் கிடைத்திருக்கிறது.

தற்போது இவருக்காக பாலாஜி மொட்டை அடித்து கொண்டு அவரை அடுத்த வாரம் நாமினேஷனில் இருந்து காப்பாற்றியுள்ளார்.

இந்நிலையில் நடிகை ஜனனியை அவருடைய காதலன் பணத்தை காரணம் காட்டி உதறித் தள்ளியுள்ளார்.

இதனால் அவரை விட அதிகம் சம்பாதித்து காட்ட வேண்டும் என்பதற்காக சினிமா துறையில் இறங்கியுள்ளார்.

ஆனால் சினிமா துறையிலும் பல போராட்டங்களுக்கு பிறகு தான், இன்று நல்ல ஒரு நடிகை என்ற பெயரை பெற்றிருக்கிறார்.

துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த ஜனனிக்கு முதல் முதலாக கிடைத்த சம்பளம் 2,500 ரூபாய். அந்த சம்பளத்தை அவர் உடனடியாக தன்னுடைய தேவைக்கோ அல்லது குடும்பத்திற்கோ கொடுக்கவில்லை.

படிப்பதற்கு கஷ்டப்பட்ட தன் வீட்டில் வேலை பார்க்கும் அம்மாவின் மகனுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட கொடுத்துள்ளார்.

இந்த செயலை அறிந்த பலரும் ஜனனியை சமூகவலைத்தளங்களில் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் ஐஸ்வர்யாவுக்கு ஆர்மி துவக்கப்பட்டது, ஆனால் அவரின் நடவடிக்கை முற்றிலும் பிடிக்காததால் அதை மூட்டை கட்டிய ரசிகர்கள் தற்போது ஜனனிக்கு ஆர்மி துவங்கியுள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers