பிக்பாஸ் 2 அரங்கின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் ஏ.சி மெக்கானிக் உயிரிழந்தார்.
தனியார் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் படப்பிடிப்பு பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் அரங்கு அமைத்து நடைபெற்று வருகிறது.
அங்கு அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த குணசேகரன் என்பவர் ஏ.சி மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.
அவர் நிகழ்ச்சி நடக்கும் அரங்கின் 2-வது மாடியில் தங்கியுள்ளார். நேற்று இரவு இவர் தங்கியிருந்த மாடியிலிருந்து கீழே விழுந்தார்.
உடனே அருகிலிருந்தவர்கள் குணசேகரனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு அவர் உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் அவர்கள் விசாரித்து வருகிறார்கள்.