பிக்பாஸ் மூடர்கூடத்திலிருந்து வெளிய வந்து பொழப்பை பாரு சென்றாயன்: விளாசிய பிரபல இயக்குனர்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சென்றாயன் வெளியேற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்நிகழ்ச்சியை பிரபல இயக்குனர் நவீன் விமர்சித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் சென்றாயன் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

எல்லாரும் ஐஸ்வர்யா தான் வெளியேறுவார் என எதிர்பார்த்த நிலையில், சென்றாயன் வெளியேற்றப்பட்டது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், மூடர்கூடம் என்னும் திரைப்படம் தான் சென்றாயனுக்கு திருப்புமுனையாக அமைந்தது.

இத்திரைப்படத்தின் இயக்குனர் பிக்பாஸ் நிகழ்ச்சியை டுவிட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அந்த பதிவில், வாடா தம்பி சென்றாயா. வந்து பொழப்ப பாரு.

பிக்பாஸ் எனும் மூடர்கூடத்திலிருந்து வெளியே வரும் சென்றாயனுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்