பார்வையில்லாத பிரபல பாடகிக்கு திருமணம்: மாப்பிள்ளை யார் தெரியுமா?

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
1072Shares
1072Shares
lankasrimarket.com

பிரபல பாடகியான வைக்கம் விஜயலட்சுமிக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில் அது குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

கண்பார்வையில்லாத பாடகியான வைக்கம் விஜயலட்சுமி இசையுலகில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார்.

அவருக்கு, மிமிக்ரி கலைஞரான அனூப் என்பவருடன் திருமண நிச்சயம் முடிந்துள்ளது. இது குறித்து விஜயலட்சுமி பேசுகையில், மற்ற பெண்கள் போலவே எனக்கும் திருமணத்தின் மீது ஆர்வம் இருந்தது.

கொஞ்சம் தாமதம் என்றாலும், என்னை முழுதாக புரிந்துகொண்ட நல்ல மனிதர் வாழ்வின் துணையாக வந்திருக்கிறார்.

நேற்று காலையிலிருந்தே எனக்குத் தேவையானதைப் அவர் பார்த்துப் பார்த்து கவனித்துக்கொண்டார்.

நான் மகிழ்வின் உச்சியில் இருக்கிறேன். என் குருநாதர் யேசுதாஸ் என்னை வாழ்த்தினார். நீ கடவுளின் மகள். உனக்கு எந்தக் குறையும் வராது என்றார்.

அவரின் வாழ்த்து என்னை வழிநடத்தும். என் திருமணம் நல்லபடியாக முடிய நீங்களும் வேண்டிக் கொள்ளுங்கள் என உற்சாகமாக கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்