47 வயதில் டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பெற்ற பிரபல நடிகை ரேவதி: வெளியான தகவல்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

தன்னிடம் உள்ள குழந்தை தத்து குழந்தை கிடையாது எனவும், தான் பெற்றெடுத்த குழந்தை எனவும் நடிகை ரேவதி கூறியுள்ளார்.

தமிழ்திரையுலகில் முன்னணி நடிகையாக திகழும் ரேவதி இந்தி, தெலுங்கு, கன்னடா, மலையாளம் படங்களிலும் நடித்துள்ளார்.

திரையுலகில் ரேவதி சாதனை படைத்தாலும் திருமண வாழ்க்கையில் தோல்வியை சந்தித்தார்.

கடந்த 1986 ஆம் ஆண்டு பிரபல ஒளிப்பதிவாளர் சுரேஷ் சந்திரமேனனை காதலித்து மணந்த ரேவதி அவரை கடந்த 2000-ஆம் ஆண்டு விவாகரத்து செய்ய விரும்புவதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இவர்களுக்கு 2013ஆம் ஆண்டு விவாகரத்து கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் ரேவதி கடந்த சில வருடங்களுக்கு முன் மஹி என்ற ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருகிறார் என்று கூறப்பட்டது.

இது குறித்து, ரேவதியும் எதுவும் கூறாமல் இருந்து வந்த நிலையில், தற்போது முதல் முறையாக மஹி தன்னுடைய தத்து குழந்தை இல்லை நான் 10 மாதம் சுமந்து பெற்ற குழந்தை என கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், இது என்னுடைய சொந்த குழந்தை, நான் டெஸ்ட் டியூப் சிகிச்சை மூலம் குழந்தை பெற்று கொண்டேன்.

ஆனால் அவள் என் தத்து மகள் என பலர் வதந்திகளை பரப்பி வருகிறார்கள் என்றும் இது குறித்து அதிகமாக பேச விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்