நடிகர் விஜய்யால் ஸ்தம்பித்த போக்குவரத்து....இந்திய அளவில் முதலிடம்: வெளியான வீடியோ

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

நடிகர் விஜய் தனது மனைவியுடன் புதுச்சேரியில் நடைபெற்ற திருமணம் ஒன்றுக்கு வருகை தந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

நடிகர் விஜய் மக்கள் இயக்க தலைவர் ஆனந்தின் மகளுக்கு பாண்டிச்சேரி ஆரோவில்லில் உள்ள தங்கமித்ரா ஹாலில் திருமணம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் புதுச்சேரிக்கு இரவு 7.10 மணிக்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தி அடுத்த 10 நிமிடத்தில் அங்கிருந்து கிளம்பினார்.

வருவதை அறிந்த ரசிகர்கள் அப்பகுதியில் குவிந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. விஜய் புதுச்சேரிக்கு சென்றதை அவரது ரசிகர்கள் பாண்டிவெல்கம்ஸ் தளபதி என்ற ஹேஷ்டேக்குடன் கொண்டாடி வருகின்றனர்.

இந்த ஹேஸ்டேக் உருவாக்கப்பட்ட சிறிது நேரத்தில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers