நீடிக்கும் மர்மம்: பல ஆண்டுகளாக பூட்டிய வீட்டுக்குள் தனிமையில் வசிக்கும் நடிகை கனகா

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

கரகாட்டக்காரன் படத்தை தொடர்ந்து நடிகை கனகா தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்தார்.

12 வருடங்கள் சினிமாவில் நடித்து வந்த அவர், அதன்பிறகு நடிக்கவில்லை. ‘முத்துகுமார்’ என்ற என்ஜினீயரை அவர் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது.

ஆனால், முத்துகுமார் யார் என்றே எனக்கு தெரியாது என்று கனகா கூறினார். இதற்கிடையில், 2013 ஆம் ஆண்டு ஆலப்புழா மருத்துவமனையில் அவர் மரணமடைந்துவிட்டதாக ஒரு தகவல் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால், அந்த தகவல் போலியானது என்றும் தனது தந்தை தன்னிடம் உள்ள சொத்துக்களை அபகரிப்பதற்காக இப்படி ஒரு தகவலை பரப்பினார் என இந்த போலியான செய்திக்கு பின்னர் கனகா விளக்கம் அளித்தார்.

இவரது அம்மா தேவிகா பிரபல கதாநாயகியாக ஏராளமான படங்களில் நடித்து சம்பாதித்த சொத்துகளுக்கு எல்லாம் ஒரே வாரிசு கனகாதான்.

தனது தாயார் தேவிகா சம்பாதித்து வாங்கிய ஒரு பழைய பங்களாவில்தான் அவர் வசித்து வருகிறார். தன்னிடமுள்ள சொத்துக்களை யாராவது பறித்து விடுவார்களோ என்ற பயம் அவரின் அடிமனதில், மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், அதனால்தான் அவர் யாருடனும் பேசிப்பழகுவது இல்லை என கூறப்படுகிறது.

மேலும், இவரது தந்தையே சொத்துக்காக தன்னை துன்புறுத்துகிறார் என கனகா குற்றச்சாட்டு சுமத்தினார்.

கடந்த சில வருடங்களாக வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு தனிமையில் வசித்து வருகிறார். பெரும்பாலும் அவர் வெளியே வருவதில்லை. சமீபத்தில் நடந்த ஒரு சினிமா சங்க தேர்தலில் அவர் கலந்து கொண்டு ஓட்டுப்போட்டதாக கூறப்படுகிறது.

பூட்டிய வீட்டுக்குள் வருடக்கணக்கில் அவர் வசித்து வருவது, அவரை பற்றிய மர்மங்களை மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்