அப்பா வயது நபருடன் இப்படியா? நடிகையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

ஹிந்தி நடிகை ரியா சக்ரபர்த்தி சமீபத்தில் இயக்குநர் மகேஷ் பட் உடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் அவரை சரமாரியாக கலாய்த்துள்ளனர்.

ஹிந்தி திரையுலகின் பிரபல இயக்குநர் மகேஷ் பட். இவர் கடந்த 20ஆம் திகதி தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், நடிகை ரியா சக்ரபர்த்தியும் தான் மகேஷ் பட்டுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் அவர், ‘என் புத்தருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். சார், இது நாம். நீங்கள் எனக்கு அன்பை காட்டினீர்கள், என் சிறகுகளை விரித்துவிட்டீர்கள்’ என குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அந்த புகைப்படங்களில் இருவரும் நெருக்கமாக இருப்பது போல் உள்ளது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து, அப்பா வயதுடைய நபருடன் இவ்வாறு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளீர்களே என ரியாவை ரசிகர்கள் பலர் கலாய்த்து வருகின்றனர்.

அத்துடன், மகேஷ் பட்டிடம் இருந்து விலகியே இருக்க வேண்டும் என ரியாவிற்கு ரசிகர்கள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். இதன் காரணமாக ரியா சக்ரபர்த்தி கவலையடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்