ஸ்ரீரெட்டியின் அடுத்த சர்சையில் சிக்கிய நடிகை ஹேமா

Report Print Kavitha in பொழுதுபோக்கு

தெலுங்கு திரையுலகில் முக்கிய பிரமுகர்கள் மீது பாலியல்‌ புகார்களைக் கூறிய‌ பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி.

இவர் தொடர்ந்து திரையுலகில் பல சர்சைகளை உருவாக்கியவர்.

தற்போது இவர் தெலுங்கு நடிகை ஹேமா குறித்து தனது முகப்புத்தகத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

நடிகை ஹேமா ஸ்ரீரெட்டியை குறித்து ஏற்கனவே விமர்சித்து இருந்தார்.

அவர் கூறும்போது, “ஸ்ரீரெட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்தியது நல்லது அல்ல. இயக்குனர் தனது பார்வைக்கேற்ப நடிகர், நடிகைகளுக்கு கதைக்கேற்ற கதாபாத்திரத்தை கொடுப்பார். யாருடைய பரிந்துரையிலும் வாய்ப்புகள் கொடுப்பது இல்லை. ஸ்ரீரெட்டி திரையுலகினர் மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்” என்றார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்ரீரெட்டி ஹேமாவுக்கு தனது முகப்புத்தகத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“ஹேமா நீங்கள், கூகுள் சி.இ.ஒ சுந்தர் பிச்சையிடம் சொல்லி உங்களுடையை ஆபாச வீடியோவை நீக்கச் சொல்லுங்கள். அதன்பிறகு மக்கள் மத்தியில் நான் ஆடையை கழற்றியது பற்றி பேசுங்கள். உங்கள் கருப்பு பக்கத்தை பார்க்காமல் எனது போராட்டத்தை பற்றி பேசாதீர்கள். என்னைப் பற்றி தெரியாமல் நீங்கள் கருத்து சொன்னால், நீங்கள் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எனது அதிரடியை பார்க்க வேண்டி இருக்கும்” என்று கூறியுள்ளார்.

தற்போது இந்த மோதல் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்