பரிசுத்தொகை 50 லட்சத்தையும் புற்றுநோயாளிகளுக்கு தானம் செய்த பிக்பாஸ் வெற்றியாளர்!

Report Print Kabilan in பொழுதுபோக்கு

தெலுங்கு பிக் பாஸ்-2 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற கவுஷல் எனும் போட்டியாளர், தனக்கு கிடைத்த பரிசுத்தொகையான 50 லட்சத்தையும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் சிகிச்சைக்கு அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நேற்றுடன் முடிவடைந்தது. நடிகர் நானி தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில், தொலைக்காட்சி நடிகரான கவுஷல் என்பவர் வெற்றி பெற்றார்.

அவருக்கு பரிசுத்தொகையாக ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது. பின்னர் அவர் கூறியது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதாவது, கவுஷலின் தாய் புற்றுநோயால் அவதிபட்டபோது சிகிச்சைக்கு பணம் இல்லாததால் இறந்துவிட்டார்.

எனவே, தனக்கு கிடைத்த பரிசுத்தொகை முழுவதையும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் சிகிச்சைக்கு அளிப்பதாக கவுஷல் அறிவித்தார். அவரின் இச்செயல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியதுடன், பாராட்டவும் செய்தது.

பிக் பாஸ்-2 நிகழ்ச்சியில் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி ரசிகர்களை பெற்றதால், அவர்களின் ஆதரவுடன் கவுஷல் வெற்றியாளராக அறிவிக்கப்பாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்