பாலியல் புகார் கூறிய நடிகை தாக்கப்படும் வீடியோ காட்சிகள் வெளியானது

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

கடந்த 2008-ல் ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ இந்தி திரைப்படத்துக்கான பாடல் காட்சி ஒத்திகையின்போது, நடிகர் நானா படேகர் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என நடிகை தனுஸ்ரீ தத்தா அண்மையில் பரபரப்பு புகார் கூறினார்.

பாலி யல் தொந்தரவை தொடர்ந்து படப் பிடிப்பு தளத்தை விட்டு வெளி யேறிய தன்னை அரசியல் கட்சி குண்டர்கள் மூலம் நானா படேகர் மிரட்டினார் என்றும் தனுஸ்ரீ தத்தா கூறினார்.

இந்நிலையில் 2008 சம்பவத்துடன் தொடர்புள்ளதாக கூறப்படும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதில் காரில் பின் இருக்கையில் தனுஸ்ரீ தத்தா அமர்ந்திருக்க, முன் இருக்கைகளில் டிரைவரும் மற்றொரு நபரும் அமர்ந்துள்ளனர்.

அப்போது 10-க்கும் மேற்பட்டோர் சூழ்ந்துகொண்டு காரை தாக்கிச் சேதப்படுத்துகின்றனர்.

தற்போது இந்த வீடியோ வைரலாகியுள்ளது. மேலும், தனுஸ்ரீ தத்தாவுக்கு எதிராக நானா படேகர் தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்