பிரபல நடிகை ராஜா ராணி ஆல்யா மானசா ஏன் பிரிந்தார்? நடந்ததை விளக்கிய காதலன் மானஸ்

Report Print Santhan in பொழுதுபோக்கு

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி என்ற சீரியலில் நடித்து வருபவர் தான் செம்பா என்ற ஆல்யா மானசா.

இவர் மானஸ் என்ற நபரை காதலித்து வந்தது அனைவருக்கும் தெரியும். ஆனால் சமீபகாலமாக இருவருமே பிரிந்துவிட்டதாகவும், ஆல்யா ராஜா ராணியில் அவருக்கு கணவராக நடித்த் வருபவரை காதலித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் பிரபல தமிழ் ஊடகம் ஒன்று ஆல்யாவின் முன்னாள் காதலன் மானசிடம் இது குறித்து கேட்டுள்ளது. அப்போது அவர், ஐந்து முதல் ஆறுவருடமாக எனக்கு தெரியும். மானாட மயிலாட நிகழ்ச்சியில் இருந்து தான் அவங்க அறிமுகம் ஆனாங்க, அவங்க திடீர் என்று வந்து என்கிட்ட காதலை சொன்னாங்க.

நானும் அதற்கு சரி என்று சொன்னேன். சமீபத்தில் முடிந்த காதலர் தினத்து வரைக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனா அவங்க மனசுல என்ன மாற்றம் வந்தது தெரியல, திடீர்னு நமக்கிடையே செட் ஆகாதுன்னு சொல்லிட்டாங்க,

நான் என்ன பதில் சொல்றது. ப்ரப்போஸ் செய்ததும் அவங்கதான், வேண்டாம்கிறதும் அவங்கதான். அதுக்கு மேல யார் என்ன பண்ண முடியும். நல்லா இரும்மா'ன்னு சொல்லிட்டு சினிமாவுல கான்சென்ட்ரேஷன் பண்ணத் தொடங்கிட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers