படவாய்ப்புகள் தருவதாக பலரால் ஏமாற்றப்பட்ட பிரபல நடிகை! தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகையான ஸ்ரீரெட்டி படவாய்ப்புகள் தருவதாக பலர் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி, முக்கிய நடிகர்கள், டைரக்டர்கள் என பலர் மீது புகார் அளித்தார்.

இது திரையுலகில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, அதோடு மட்டுமின்றி இவர் தனித் தனியாக ஒவ்வொரு நடிகரின் பெயரையும் குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அவர் ஆந்திராவில் நீதி கிடைக்கவில்லை, தமிழ்நாடு எனக்கான வலிகளை வெளியே வந்து கொண்டிருக்கிறது.இனி சென்னையில் செட்டிலாகி அடுத்தடுத்து படங்களில் நடிக்க இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், அவர் சென்னை வளசரவாக்கத்தில் வாடகைக்கு வீடு வாங்கி குடியேறிவிட்டார். அவர், தன் புதுவீட்டின் முன் பசுக்களோடு இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இது குறித்து அவர் கூறுகையில், தெலங்கானாவைவிட சென்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சென்னையில் உள்ள முக்கியமான கோயில்களுக்குச் சென்றுவிட்டேன்.

அடுத்த வாரம் காஞ்சிபுரம், கும்பகோணம் ஆகிய இடங்களில் உள்ள கோவில்களுக்குச் செல்ல இருக்கிறேன். சமீபத்தில், யு டர்ன் படம் பார்க்கச் சென்றிருந்தபோது, நிறையப் பேர் என்னிடம் வந்து பேசினார்கள்.

பெண்களுக்கு நடக்கும் பிரச்னைகளை வெளிப்படையாகச் சொன்னதுகுறித்து வாழ்த்துகள் கூறினார்கள். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அடுத்து, மூன்று தமிழ்ப் படங்களில் கமிட்டாகியுள்ளேன். அதுகுறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று கூறியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு தன்னிடம் ஒன்றுமே இல்லை என்று போராட்டம் நடத்திய ஸ்ரீரெட்டி, தற்போது சென்னையில் வீடு, அடுத்தடுத்து படங்கள் என மகிழ்ச்சியாக உள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்