நடிகர் அர்ஜுனின் பிறந்த நாளுக்கு மகள்கள் கொடுத்த ஆச்சரிய பரிசால் குவியும் பாராட்டு! அப்படி என்ன கொடுத்தார்கள் தெரியுமா?

Report Print Santhan in பொழுதுபோக்கு
2179Shares
2179Shares
ibctamil.com

பிரபல திரைப்பட நடிகரான அர்ஜுனிற்கு பிறந்த நாள் பரிசாக அவரது மகள்கள் பசுவை கொடுத்து அசத்தியுள்ளனர்.

திரைப்பட நடிகரான அர்ஜுன் சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடினார். அப்போது அவருடைய பிறந்த நாளுக்கு அவரது இரண்டு மகள்களும் யாரும் எதிர்பாரத மிகச் சிறந்த பரிசை ஒன்றை கொடுத்துள்ளனர்.

அதாவது குஜராத்தில் இருந்து ஸ்பெஷல் பசுவை வரவைத்து அர்ஜுன் பிறந்த நாளுக்கு பரிசாக கொடுத்துள்ளனர்.

சாதரணமாக பிறந்த நாள் என்றால், யாராக இருந்தாலும் தன்னால் முடிந்த அளவிற்கான பரிசை வாங்கி கொடுப்பார்கள் சைக்கிள் கார் பைக் என இதில் எதாவது விலை உயர்ந்த பொருளை வாங்கி பரிசாக தருவார்கள். இது அவரவர் பொருளாதரத்தை பொருத்து மாறுபடும்.

ஆனால் அதில் நிச்சயம் அன்பு இருக்கும். அந்த வகையில் தான் அர்ஜுனின் மகன்கள் அரிய வகை பிறந்த நாள் பரிசாக பசுவை கொடுத்து அவரை சந்தோஷ மழையில் நனைய வைத்துள்ளனர்.

இது குறித்து அர்ஜுன் தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில், தன் மகள் இருவரும் சேர்ந்து கொடுத்த மிக பெரிய பரிசு இந்த மாடு என கூறி சந்தோஷப்பட்டு உள்ளார். இது குறித்து சமூகவலைத்தளம் வாசிகள் பல்வேறு கருத்துகளை பாதிவிட்டு பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்