ஆபாச நாயகியான நீ இப்படி ஒரு படத்தில் நடிக்ககூடாது: சன்னி லியோனுக்கு எதிராக போராட்டம்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

சன்னிலியோன் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் உதயன் தயாரிப்பில் வீரமாதேவி என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

பண்பாடு, கலாசாரம், சரித்திரத்தை எடுத்துரைக்கும் இந்தப் படத்தில் சன்னிலியோன் நடிக்கக் கூடாது என்று கன்னட யுவ ரக்‌ஷன வேதிகே அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சன்னிலியோனுக்கு கண்டனம் தெரிவித்து கன்னட அமைப்பினர் பெங்களூருவில் போராட்டம் நடத்தினர்.

கலாசாரம் பண்பாட்டை வெளிப்படுத்தும் சரித்திர திரைப்படத்தில் நடிப்பதற்கு சன்னிலியோனுக்கு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கன்னட அமைப்பின் தலைவர் ஹரீஷ் கூறுகையில், வீரமாதேவி ஒரு சரித்திர நாயகி. தென்னிந்தியாவில் பல கோயில்களை கட்டியுள்ளார்.

கர்நாடகாவில் மட்டும் அவர் 8 கோயில்களை கட்டியுள்ளார். இந்த சரித்திர நாயகியின் கதாபாத்திரத்தில் ஒரு ஆபாச நடிகை நடிப்பதை ஏற்று கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers