வைரமுத்து சர்ச்சை: உங்களுக்கு இது போன்று நடந்துள்ளதா? நடிகை காயத்ரி ரகுராம் அதிரடி பதில்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளீர்களா என்ற கேள்விக்கு பிக்பாஸ் புகழ் நடிகை காயத்ரி ரகுராம் பதிலளித்துள்ளார்.

சினிமாவில் பாலியல் தொந்தரவுக்கு நடிகைகள் மட்டுமல்ல பெண் கலைஞர்களும் உள்ளாகியுள்ளனர். அந்த வகையில் பெயர் தெரியாத பெண் கவிஞர் ஒருவர் தமிழ் சினிமாவின் பிரபல கவிஞரான வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்ததாக கூறினார்.

இதையடுத்து பாடகி சின்மயியும் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என கூறி அதிரவைத்தார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் டுவிட்டரில், நடிகை காயத்ரி ரகுராமிடம், உங்களுக்கும் இது போன்று தொல்லைகள் வந்திருக்கிறதா என்று கேள்வி கேட்டார்.

அதற்கு பதிலளித்த காயத்ரி, என்னை பிக் பாஸில் பார்த்த பிறகுமா ஒருவர் என்னிடம் தவறாக நடந்து கொள்வார் என்று நினைக்கிறீர்கள். அப்படி நடந்தால் அவர்களுக்கு நான் இரண்டு மடங்காக பதிலடி கொடுப்பேன். பெண் குழந்தைகள் கூட இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டு தான் வருகின்றனர் என பதிவிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers