ஜோதிடர் கூறியதால்தான் சிம்பு இப்படி ஒரு முடிவு எடுத்தாரா

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

சிம்புவை வைத்து ‘கெட்டவன்’ என்ற படத்தை இயக்கியவர் ஜி.டி.நந்து. பாதியிலேயே அந்த படம் நிறுத்தப்பட்டது.

இயக்குனர் நந்து ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- சிம்புவும் நயன்தாராவும் பிரிந்ததற்குப் பல காரணங்கள் சொல்கிறார்கள்.

ஆனால் எனக்குத்தெரிந்து ஒரு வி‌ஷயம், முக்கியமான காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.

திருவல்லிக்கேணி பிள்ளையார் கோவில் தெருவில் இருந்த ஜோசியர் ஒருவரை நானும் சிம்பு தரப்பில் ஒருவரும் சென்று சந்தித்தோம். சிம்பு, நயன்தாரா இருவரின் ஜாதகங்களைப் பார்த்த அந்த ஜோசியர் ‘நயன்தாராவுக்குத் திருமணம் நடைபெற்றால் அவர் தெருவுக்குத்தான் வர வேண்டிய நிலை இருக்கிறது.

அவருக்கு திருமணம் நடைபெறாமல் இருந்தால் முதல் -அமைச்சர் ஆகக்கூடிய வாய்ப்பு கூட இருக்கிறது என கூறினார்.

இதுதான் அவர்கள் பிரிந்ததற்கான காரணமாக இருக்கும் எனக் கருதுகிறேன் என்று பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்