சின்மயி சொல்வது உண்மை: எனக்கும் அப்படி நடந்துச்சு... நடிகை வரலட்சுமி சரத்குமார் அதிரடி

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

சின்மயி சொல்லும் பாலியல் புகாரில் உண்மை இருப்பதாக நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

கவிப்பேரரசு வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் தெரிவித்த விவகாரம் சூடு பிடித்துள்ளது.

தொடக்கத்தில் திரையுலகினர் இது குறித்து பேசாத நிலையில் தற்போது பலர் சின்மயிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

ஏற்கனவே நடிகை சமந்தா, நடிகர்கள் விஷால், சித்தார்த் ஆகியோர் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் சின்மயிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

வரலட்சுமி கூறுகையில், சின்மயி சொல்வதில் உண்மை உள்ளது.

தான் சிறுமியாக இருந்தபோது கிட்டத்தட்ட 5 பேர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர் நடத்தும் உன்னை அறிந்தால் தொலைக்காட்சி நிகழ்ச்சி ப்ரொமோ வீடியோவில் இதை தெரிவித்துள்ளார். இதை தெரிவிக்க தான் வெட்கப்படவில்லை எனவும் வரலட்சுமி கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்