தொல்லை கொடுத்த இயக்குனருக்கு மனைவி முன்பே பளார் விட்ட நடிகை: பரபரப்பு வீடியோ

Report Print Vijay Amburore in பொழுதுபோக்கு

பாலியல் தொல்லை கொடுத்த பிரபல இந்தி பட இயக்குனரை, நடிகை ஒருவர் கன்னத்தில் ஓங்கி அறையும் வீடியோ காட்சி வெளியாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘குட்டு ரங்கீலா’, ஜாலி எல் எல்பி 2ம் பாகம் போன்ற இந்தி படங்களின் மூலம் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் சுபாஷ் கபூர்.

இவரை மீது நடிகை கீதிகா தியாகி கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இயக்குனரின் மனைவி முன்னிலையில் கீதிகா தியாகியிடம் சமரச பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது ஆத்திரமடைந்த நடிகை கீதிகா, திடீரென இயக்குனரின் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிடுகிறார்.

இதனை தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கீதிகா, இதுதான் இயக்குனரின் உண்மையான முகம் எனக்கூறி பதிவிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்