பிரபல நடிகரின் தந்தை மரணம்: கண்ணீர் சிந்திய நடிகர்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல நடிகர் சுராஜ் வெஞ்சரமூடிவின் தந்தை வாசுதேவன் நாயர் உடல்நலக்குறைவால் தனது 78வது வயதில் காலமானார்.

நூற்றுக்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளதுடன், தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளவர் நடிகர் சுராஜ் வெஞ்சமூடி.

இவரது தந்தையான வாசுதேவன் நாயருக்கு சில காலமாக உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் கேரளாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் வாசுதேவனின் உயிர் சனிக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் பிரிந்தது.

தந்தையின் மறைவையடுத்து சுராஜ் கண்ணீர் விட்டு அழுதார். வாசுதேவனின் இறுதிச்சடங்குகள் ஞாயிறு மதியம் நடைபெறவுள்ளது.

மறைந்த வாசுதேவனுக்கு விலாசினி என்ற மனைவியும் சுராஜ், சுஜாதா, சஜி என்ற மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers