உறக்கமில்லாமல் தவித்த யானையை இளையராஜாவின் பாடல் படி உறங்கவைத்த நபர்

Report Print Vijay Amburore in பொழுதுபோக்கு

கேரளாவில் உறக்கமில்லாமல் தவித்த யானையை அதன் பாகன் இசைஞானி இளையராஜாவின் பாடலை பாடி உறங்கவைக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கேரளா திருச்சூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகுமார் என்ற பாகன் பாஸ்டியன், வினய்சுந்தர் யானைகளை வளர்த்து வருகிறார்.

கடந்த சில நாட்களாகவே உறங்குவதற்கு சிரமப்பட்டு வந்த யானையை உறங்க வைக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவானா ‘அல்லியிளம் பூவே’ என்ற பாடலை பாடிக்கொண்டே யானையின் தும்பிக்கையை தடவிகொடுக்கிறார் பாஸ்டியன்.

அடுத்த சில நிமிடங்களில் அந்த யானை உறங்க ஆரம்பிக்கிறது. இந்த பாடல் 1984-ம் ஆண்டு வெளியான ‘மங்களம் நேருன்னு’ என்ற மலையாளப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஆகும்.

இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தளம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்