எந்த உள்ளாடை அணிந்துள்ளீர்கள்? ஆபாசமாக பேசியதாக தமிழ் நகைச்சுவை நடிகர் மீது நடிகை புகார்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

சினிமா படப்பிடிப்பின் போது தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் தன்னிடம் ஆபாசமாக பேசியதாக கன்னட நடிகை சங்கீதா புகார் தெரிவித்துள்ளார்.

நடிகைகள் ‘மீ டூ’வில் பாலியல் தொல்லைகளை பகிர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழில் லொள்ளுசபா புகழ் ஜீவா நடித்த ஆரம்பமே அட்டகாசம் படத்தில் நடித்த நடிகை சங்கீதா தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், எனக்கு 15 வயது இருக்கும்போதே இயக்குனர் ஒருவர் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக அவரது காரில் அழைத்துச் சென்று சில்மிஷங்கள் செய்தார். நான் அதிர்ச்சியானேன்.

2016-ல் தமிழில் டி.வி நகைச்சுவை நடிகர் கதாநாயகனாக நடித்த படத்தில் நடித்தேன். அவரது பைக் பின்னால் நான் அமர்ந்து செல்வதுபோன்ற காட்சியை எடுத்தனர். பைக்கை வேகமாக ஓட்டி சென்று திடீரென்று நிறுத்தினார். அப்போது என்னிடம் நீங்க அந்த உள்ளாடை அணிந்து இருக்கிறீர்கள் என்று கேட்டு ஆபாசமாக பேசினார்.

விளம்பரத்துக்காக பாலியல் புகாரை கூறவில்லை. யாருடைய பெயரையும் நான் சொல்லவில்லை. அந்த சம்பவங்கள் எனக்கு வேதனையை ஏற்படுத்தியதால் வெளிப்படுத்தினேன் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...