சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் சவுந்தர்யாவுக்கு இரண்டாவது திருமணம்: மாப்பிள்ளை யார் தெரியுமா?

Report Print Santhan in பொழுதுபோக்கு

திரைப்பட நடிகரான ரஜினியின் இரண்டாவது மகளான சவுந்தர்யாவுக்கும், தொழிலபதிபர் வணங்காமுடியின் மகண் விசாகனுக்கும், வரும் தை மாதத்தில் இரண்டாவது திருமணம் நடைபெறவுள்ளது.

நடிகர் ரஜினியின், இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் அஸ்வினுக்கும், சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.

அதன் பின் தன் மகனுடன், சென்னை, போயஸ் தோட்டம் வீட்டில், பெற்றோருடன் சவுந்தர்யா வசித்து வருகிறார். திரைபடத் தயாரிப்பு, இயக்கம் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் கோயமுத்தூரைச் சேர்ந்த தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பொன்முடியின் சகோதரரும், பிரபல தொழிலதிபருமான வணங்காமுடியின் மகன் விசாகன். இவரும், ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து பெற்றவர்.

தேவர் சமுதாயத்தை சேர்ந்த விசாகனுக்கும், சவுந்தர்யாவுக்கும், இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய, நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டு உள்ளது. இருவரின் திருமணம், வரும், தை மாதத்தில் நடைபெறவுள்ளது.

விசாகன், வெளிநாட்டில், எம்.பி.ஏ., படிப்பை முடித்து, சென்னையில், மிகப் பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.

மேலும் விசாகனின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்