பொதுமேடையில் பிரபல நடிகையை திடீரென முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்!

Report Print Kabilan in பொழுதுபோக்கு

நடிகை காஜல் அகர்வாலை பொது மேடையில் ஒளிப்பதிவாளர் ஒருவர் முத்தமிட்டதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், காஜல் அகர்வால் நடித்துள்ள திரைப்படம் ‘கவச்சம்’. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர், நடிகைகள் உட்பட தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட அனுபவங்களை நடிகை காஜல் அகர்வால் தெரிவித்தார். அப்போது ஒளிப்பதிவாளர் சோட்டா நாயுடு, திடீரென காஜல் அகர்வாலை அணைத்து முத்தம் கொடுத்தார்.

உடனே சான்ஸ் பீ டான்ஸ் என்று அவரிடம் கூறி இதனை காஜல் அகர்வால் சமாளித்தார். இந்நிலையில், காஜலின் ரசிகர்கள் ட்விட்டரில் #BanChotaKNaidu என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ஒளிப்பதிவாளரை விமர்சித்து வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers