திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த பிரபல நடிகை தீபிகபடுகோனின் திருமணம்! தாலி மட்டும் எவ்வளவு தெரியுமா?

Report Print Santhan in பொழுதுபோக்கு

ஹிந்தி திரைப்பட உலகில் பிரபல நடிகையான தீபிகா படுகோன் மற்றும் நடிகர் ரன்வீர் சிங் இருவரும் காதலித்து வந்தனர்.

படங்களில் ஒன்றாக நடித்து வந்த இவர்களின் நடிப்பில் சமீபத்தில் வெளியான பத்மாவதி திரைப்படம் பெரிய வெற்றி பெற்றது.

நட்சத்திர ஜோடியான இவர்களது திருமணம் இத்தாலியில் நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இன்று இத்தாலியின் லேக் கோமோ பகுதியில் இவர்களது திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணம் கொங்கனி சடங்கு முறைப்படி மந்திரங்கள் முழங்க நடந்தது.

இதில் 30 முதல் 40 விருந்தினர்களுக்கு மட்டுமே கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

அதில் நடிகர் ஷாரூக்கான், பத்மாவதி இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, பிரபல நடன இயக்குநர் பரா கான் உள்ளிட்டோரை மட்டுமே திருமணத்துக்கு அழைத்திருக்கிறார்கள்.

மற்றவர்கள், நவம்பர் 21-ஆம் திகதி பெங்களூரிலும், 28-ஆம் தேதி மும்பையிலும் நடைபெறவுள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள்.

பாலிவுட் வரலாற்றிலேயே இவர்களின் திருமண பட்ஜெட்தான் மிகவும் அதிகம் என்று கூறப்படுகிறது.

தீபிகாவின் தாலி மட்டும் 20 லட்சம் ரூபாயாம், இவர்களின் திருமணம், இரண்டு வெவ்வேறு பாரம்பர்ய முறைப்படி நடக்கவிருக்கிறது.

திருமணத்திற்கு வருபவர்களுக்கு கடுமையான விதிமுறைகள் இருந்தது. அதாவது தீப்வீர் ஜோடி நிகழ்விடத்தில் மொபைல்போன் உபயோகிக்கக் கூடாது என்பதுதான் அந்த விதிமுறை. அதுமட்டுமின்றி ஊடகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

ஏனெனில் அங்கு வந்திருப்பவர்கள் முழுக்க முழுக்க இவர்களோடு ஒன்றிணைந்து கொண்டாடவேண்டும் என்பதற்காகவே இந்த விதிமுறையை அறிவித்துள்ளார்கள்.

இந்நிலையில், நேற்று உறவினர்கள் சூழ மெஹெந்தி திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு இருவரும் ஒரே நிற ஆடை அணிந்திருந்தனர்.

இவர்களுக்கான பிரத்தியேக ஆடைகளை வடிவமைத்தவர், விருஷ்காவுக்கு ஆடைகள் வடிவமைத்த சபியாசச்சி முகர்ஜி.

இந்தக் கொண்டாட்டத்தில் பங்குபெற்ற அனைவருக்கும், தீப்வீர் ஜோடி கைப்பட எழுதிய குறுஞ்செய்தியைக் கொடுத்திருக்கின்றனர்.

மணமேடையை அலங்கரிக்க, Florence நகரத்திலிருந்து 12 பேரை வரவழைத்துள்ளனர். தீபிகாவிற்கு பிடித்த மலரான லில்லி மலர்களைக்கொண்டே மேடையை அலங்கரித்துள்ளனர்.

பாலிவுட் மட்டுமல்லாது, உலக ரசிகர்கள் அனைவரும் தீபிகாவுக்கு, ரன்வீர் என்ன மாதிரியான சர்ப்ரைஸ் வைத்திருப்பாரோ என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers