கோலாகலமாக நடந்த சிவாஜி பேரன்-நடிகை சுஜா வருணி திருமணம்! பிரபலங்கள் வாழ்த்து

Report Print Kabilan in பொழுதுபோக்கு
273Shares

நடிகை சுஜா வருணி-நடிகர் சிவாஜிதேவ் என்கிற சிவகுமார் இருவருக்கும், இன்று காலை சென்னை அடையாரில் உள்ள கிரவுன் பிளாசா ஓட்டலில் விமர்சியாக திருமணம் நடைபெற்றது.

தமிழில் வாத்தியார், நாளை, பழனி, கிடாரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சுஜா வருணி. இவரும், மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான சிவாஜிதேவ் என்கிற சிவகுமாரும் காதலித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததால், கடந்த மாதம் சிவகுமார்-சுஜா வருணியின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இவர்களது திருமணம் இன்று காலை நடந்தது. சென்னை கிரவுன் பிளாசா ஓட்டலில் நடந்த இந்த திருமணத்தில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

குறிப்பாக நடிகர் சிவகுமார், எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர் விஷ்ணு வர்தன், சினேகன், ஸ்ரீப்ரியா, வடிவுக்கரசி, லிசா, சுஹாசினி, ராதிகா சரத்குமார் போன்ற பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

முன்னதாக நடிகை சுஜா தனது திருமணம் குறித்து கூறியபோது, ‘நானும், சிவாஜி தேவும் 12 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தோம். முதலில் நட்பாக பழக ஆரம்பித்த நாங்கள் பின்னர் காதலிக்கத் தொடங்கினோம்.

எங்கள் காதலுக்கு பெற்றோர்கள் சமீபத்தில்தான் சம்மதம் தெரிவித்தார்கள். அதைத் தொடர்ந்து திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்குப் பின்னும் தொடர்ந்து நடிப்பேன்’ என தெரிவித்திருந்தார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்