பல கோடி செலவில் நடந்த நடிகை தீபிகா படுகோன் திருமணம் செல்லாதாம்: கிளம்பிய பரபரப்பு சர்ச்சை

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டு, நடத்தப்பட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் திருமணம் செல்லாது என புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

தீபிகா படுகோனேவும், ரன்வீர் சிங்கும் காதலித்து வந்த நிலையில் இவர்களது திருமணம் கடந்த வாரம் இத்தாலியில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக வரவேற்பு நிகழ்ச்சி பெங்களூருவில் நடைபெற்றது.

இதோடு அவர்களது திருமணக் கொண்டாட்டம் முடியவில்லை. மும்பையில் மூன்று கட்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதில் டிசம்பர் 1ம் திகதி நடைபெறும் நிகழ்ச்சியில் மொத்த திரையுலகும் பங்கேற்கிறது.

அதற்கு முன் நடக்க இருக்கும் இரண்டு வரவேற்பு நிகழ்ச்சியிலும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சிறப்பு விருந்தாளிகள் பங்கேற்கின்றனர். இப்படியாக கோடிக்கணக்கான செலவில் ஆடம்பரமாக நடந்த அவர்களது திருமணம் செல்லாது என புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.

காரணம் தீபிகா பெங்களூரை சேர்ந்த கொங்கணி சமூகத்தை சேர்ந்தவர். ரன்வீர் பஞ்சாப் சீக்கிய சமூகத்தை சேர்ந்தவர். சீக்கிய மதப்படி குருத்துவாராவில் தான் திருமணம் நடைபெற வேண்டும்.

நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தக்கூடாது. ஆனால், ரன்வீரின் திருமணம் அப்படி நடைபெறவில்லை. இதற்கு சீக்கிய மத குரு சுக்தேவ் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விரைவில் அவர் குருத்வாரா கமிட்டியிடம் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளார். அதன்பின்னர், ஐந்து சீக்கிய குருமார்கள் சேர்ந்து இதில் முடிவு எடுப்பார்கள். அப்போது தான் இவர்களது திருமணம் செல்லுமா என்பது குறித்து தெரிய வரும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்