உலகளவில் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியல்: ஆச்சர்யத்தில் ஆழ்ந்த ஏ.ஆர்.ரகுமான்

Report Print Vijay Amburore in பொழுதுபோக்கு

உலகளவில் ட்விட்டரில் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இடம்பிடித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டில் ட்விட்டரில் மிகப்பெரிய செல்வாக்கு உடையவர்களுக்கான பட்டியலை, சமூக ஊடக கண்காணிப்பு நிறுவனமான பிராண்ட்வாட்ச் வெளியிட்டுள்ளது.

முதல் 10 இடங்களை பிடித்துள்ள ஆண், மற்றும் பெண்களுக்காக பட்டியலில், இந்தியாவின் சார்பில், பிரபல இந்தி நடிகர் அமிதாப் பஜன் 8வது இடத்தையும், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் 10வது இடத்தையும் பிடித்துள்ளார்.

ஆண்கள் பட்டியலில் முதல் இடத்தை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பாடகர் லியாம் பெய்ன் என்பவரும், இரண்டாவது இடத்தை அமெரிக்க அதிபர் டொனால்டுக்கு ட்ரம்பும் பிடித்துள்ளனர்.

அதேபோல பெண்கள் பட்டியலில் முதல் இடத்தை அமெரிக்க பாடகி டெய்லர் ஸ்விப்ட்டும், இரண்டாவது இடத்தை அமெரிக்க பாடகி கேட்டி பெர்ரியும் பெற்றுள்ளனர்.

இந்த பட்டியலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரகுமான் ஆச்சர்யம் தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்