பாடல்களுக்கு ராயல்டி கேட்ட இளையராஜா: பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் என்ன சொன்னார் தெரியுமா?

Report Print Kabilan in பொழுதுபோக்கு

இளையராஜாவின் பாடல்களை தொடர்ந்து பாடுவது குறித்து பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேசியுள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை, தன்னுடைய அனுமதியின்றி இசை நிகழ்ச்சிகளில் பாடக் கூடாது என எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு நோட்டீஸ் அனுப்பினார்.

அதனைத் தொடர்ந்து அவரது பாடல்களை பாடுவதை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நிறுத்திவிட்டார். ஆனால் தற்போது மீண்டும் இளையராஜாவின் பாடல்களை பாடத் தொடங்கியுள்ளார்.

இதனால் மீண்டும் இதனை கண்டித்துள்ள இளையராஜா, தனது அனுமதி இல்லாமல் தன்னுடைய பாடல்களை பாடக் கூடாது என்றும், அவ்வாறு மீறி பாடினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில், ‘இந்த விவகாரம் குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. என்ன நடக்குமோ அது நடக்கட்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்