திருமண விழாவில் கிரிக்கெட் விளையாடிய பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் ஜோடி: வெளியான வீடியோ

Report Print Kabilan in பொழுதுபோக்கு

பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் ஜோடி, திருமணத்திற்கு முந்தைய மெஹந்தி நிகழ்ச்சியில் கிரிக்கெட் விளையாடிய புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளது.

ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும், அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸிற்கும் நேற்றைய தினம் கிறித்துவ முறைப்படி திருமணம் நடந்தது. இதனைத் தொடர்ந்து, இன்று இந்து முறைப்படி இவர்களின் திருமணம் மீண்டும் நடைபெறுகிறது.

இந்நிலையில், திருமணத்திற்கு முந்தைய நாளான வெள்ளிக்கிழமை மெஹந்தி நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியின்போது மணமகன் வீட்டார் ஓர் அணியாகவும், மணமகள் வீட்டார் ஓர் அணியாகவும் பிரிந்து கிரிக்கெட் விளையாடினர்.

நிக் ஜோனஸ் சிக்சர் அடித்த வீடியோ, பிரியங்கா சோப்ரா அணியினருடன் இருக்கும் புகைப்படம் ஆகியவை தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்