நான் பாலியல் தொழிலாளியா? நடிகை பரபரப்பு புகார்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

தன்னை பாலியல் தொழிலாளி என்று கூறிய மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்தி நடிகை ஸரீன் கான் புகார் கொடுத்துள்ளார்.

இந்தி நடிகை ஸரீன் கான். வீர், ரெடி, ஹவுஸ்புல் 2, ஹேட் ஸ்டோரி 3 உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இவரது மானேஜராக இருந்தவர் அஞ்சலி அதா. நான்கு மாதங்கள் மட்டுமே இவரை மானேஜராக வைத்துக்கொண்ட ஸரீன் பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து விலகி வேறொருவரை மானேஜராக வைத்துக்கொண்டார்.

இதற்கிடையே ஸரீனுக்கும் அஞ்சலிக்கும் பண விவகாரம் தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இருவரும் ஆபாசமாகத் திட்டி குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டனர்.

அப்போது அஞ்சலி, பாலியல் தொழிலாளி என்று பொருள்படும்படி, ஸரீனை திட்டியும் அவரது புகழைக் கெடுக்கும் படியும் மெசேஜ் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து நடிகை பொலிசில் புகார் அளித்துள்ளார்.

அதில், அஞ்சலி தன்னை பற்றி தவறான தகவல்களைப் பரப்புவதாகவும் இன்னும் தனக்கு மாஜேனராக இருப்பதாகச் சொல்லி பணம் வாங்கு வதாகவும் கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்