விஷாலின் காதலி குறித்து மோசமான கமெண்ட்: அனிஷாவின் பதில் இதுதான்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகர் விஷால் பணத்திற்காகத் தான் உங்களை திருமணம் செய்கிறார் என்று அனிஷாவிடம் நெட்டிசன்கள் கூறியதற்கு, அவர் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகரான விஷால், ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு மொடலும், நடிகையும் அனிஷா ரெட்டியை காதலிப்பதாகவும், விரைவில் எங்கள் திருமணம் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதனால் இவர்களுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்.

ஒரு சிலர் விஷால் வரலட்சுமியை காதலிப்பதாக கூறியதால், வரலட்சுமியே நன்றாக இருக்கிறார். இவர் அந்தளவிற்கு இல்லை என்று கமெண்ட் செய்து வந்தனர்.

அதிலும் ஒரு நெட்டிசன் அனிஷாவிடம் விஷால் உங்களை பணத்திற்காகத் தான் காதலிக்கிறார், ஆட்டு மூஞ்சி போன்று இருக்கும், உங்களை எல்லாம் யார் காதலிப்பார்கள், விஷால் தன் முடிவை பரிசீலிக்க வேண்டும்.

உங்களை வரலட்சுமியை எவ்வளவோ பரவாயில்லை, நன்றாக இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

இதற்கு ஆத்திரப்படாமல், அனிஷா, அவர் என்னை ஒன்றும் பணத்திற்காக காதலிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

ஒரு சில நெட்டிசன்கள் இது போன்ற ஆட்களுக்கு எல்லாம் நீங்கள் ஏன் பதில் சொல்றீங்க, ப்ரியா விடுங்க, என்று ஆதரவாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்