நடிகை ஸ்ரீதேவி குளியலறையில் இறந்து கிடந்தது குறித்த காட்சி! படம் பற்றி கோபத்துடன் கூறிய மகள் ஜான்வி கபூர்!

Report Print Kabilan in பொழுதுபோக்கு
327Shares

மலையாள நடிகை பிரியா வாரியர் நடிக்கும் Sridevi Bungalow படம் குறித்து கேட்டதற்கு, ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கோபத்துடன் பதிலளித்தார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு Sridevi Bungalow என்ற ஹிந்தி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதனை உறுதிபடுத்தும் வகையில் நடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் மூழ்கி இறந்ததைக் குறிக்கும்படி, நடிகை பிரியா வாரியர் குளியல் தொட்டியில் அமர்ந்து கொண்டு கதறும் காட்சி இடம்பெற்றுள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த படத்தின் டீசரில் இக்காட்சி இடம்பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து படத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரிடம், இந்த படம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது வெறுப்படைந்த ஜான்வி, காது கேட்கவில்லை என்று கூறினார்.

பின்னர் மீண்டும் அந்த கேள்வி கேட்கப்பட்டபோது, ‘போதும் எதுவும் கேட்க வேண்டாம்’ என கோபத்துடன் பதிலளித்துவிட்டு ஜான்வி மேடையை விட்டு சென்றுவிட்டார்.

முன்னதாக படத்தின் இயக்குநர் பிரசாந்த், தான் நடிகை ஸ்ரீதேவியை குறிக்கும் வகையில் படத்தை எடுக்கவில்லை என்றும், போனி கபூரின் நோட்டீஸை சட்டரீதியாக சந்திப்பேன் என்றும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்