அது பாலியல் சீண்டல் என தெரிவதற்கே 8 ஆண்டுகள் ஆனது: பிரபல நடிகை பரபரப்பு பேட்டி

Report Print Kabilan in பொழுதுபோக்கு

தானும் இயக்குநர் ஒருவரால் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக ஹிந்தி நடிகை ஸ்வரா பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ராஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஸ்வரா பாஸ்கர். இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் தானும் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘நானும் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளேன். ஆனால் அது பாலியல் சீண்டல் என எனக்கு தெரியவே 8 ஆண்டுகள் ஆனது. பாலியல் சீண்டலை தெரிந்து கொள்ள நம் கலாச்சாரம் கற்றுக்கொடுக்கவில்லை.

நானும் வேலை நிமித்தமான இடங்களில் பாலியல் சீண்டலுக்கு ஆளானேன். அந்த நபரை நான் தொட அனுமதிக்கவில்லை நான் சுதாரித்துக் கொண்டேன். பாலியல் சீண்டல்கள் குறித்தான விழிப்புணர்வு குறித்து நமது பெண் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

எதற்கெடுத்தாலும் அமைதி காக்கும் நமது கலாச்சாரம் பாலியல் சீண்டலை கண்டுகொள்ளாமல் செல்ல வழிவகுத்து விடுகிறது. பாதிக்கப்படும் பெண்கள் தங்கள் குரலை உயர்த்தவே அச்சம் கொள்கிறார்கள்.

இந்த சமூகம் அவர்களை ஒரு குற்றவாளியாகவே கருதும் என அஞ்சுகிறார்கள். நம் கலாச்சாரத்திலும் மாற்றம் தேவை. பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக குரல் கொடுக்கும் நிலையை நாம் உருவாக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்