43 வயதில் திருமணமாகாமல் குழந்தைக்கு தாயான பிரபல நடிகரின் மகள்!

Report Print Kabilan in பொழுதுபோக்கு

பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் ஏக்தா கபூர், வாடகை தாய் மூலம் 43 வயதில் குழந்தைக்கு தாயாகியுள்ளார்.

ஹிந்தியில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து வருபவர் ஏக்தா கபூர். பிரபல பாலிவுட் நடிகர் ஜிதேந்திராவின் மகளான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. மேலும் திருமணம் செய்து கொள்ளும் யோசனையும் இவருக்கு இல்லை என்று கூறப்படுகிறது.

இவரது தம்பியும், நடிகருமான துஷார் கபூருக்கு திருமணமாகாத நிலையில் வாடகை தாய் மூலமாக தந்தையானர். இதனால் இவருக்கு லக்‌ஷயா என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில், ஒரு குழந்தைக்கு தாயாகும் ஆசை ஏக்தா கபூருக்கு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ள அவர் முடிவு செய்தார்.

இந்நிலையில், கடந்த 27ஆம் திகதி வாடகை தாய் மூலமாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. விரைவில் குழந்தையை ஏக்தா தனது வீட்டிற்கு கொண்டு செல்ல உள்ளார்.

இந்நிலையில், குழந்தைக்கு தாயான ஏக்தா கபூருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அத்துடன் அவர் நல்ல முடிவு எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

பாலிவுட் பிரபலங்களான ஆமீர் கான், ஷாருக்கான், இயக்குநர் கரண் ஜோஹர், நடிகை சன்னி லியோன் ஆகியோரும் வாடகை தாய் மூலமாக பெற்றோர் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...