ஒல்லியாக தெரிய பட்டினி கிடந்தேன்: மனம் திறந்த ஏஆர் ரஹ்மான்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

ஆஸ்கார் விருதைப் பெறும்போது ஒல்லியாக தெரிய வேண்டும் என்பதற்காக பட்டினி கிடந்ததாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த 2009ஆம் ஆண்டு, ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ மற்றும் ‘ஜெய் ஹோ’ பாடலுக்காக ஆஸ்கர் விருது பெற்றார். விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடுவதற்காக மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் ரஹ்மான் கலந்துகொண்டார்.

அப்போது ஆஸ்கார் விருது பெற்ற நிகழ்வு குறித்து அவர் கூறுகையில், ‘ஆஸ்கர் விழாவில் ஒல்லியாக தெரிய வேண்டும் என்பதற்காக பட்டினி கிடந்தேன். ஆஸ்கர் மிகப்பெரிய அடையாளத்தைப் பெற்றுத் தந்தது.

ஹாலிவுட்டில் அந்த அடையாளம் எனக்கு தேவைப்பட்டது. இப்போது எங்கெல்லாம் நான் குறிப்பிடப்படுகிறேனோ, அங்குள்ள மக்களுக்கெல்லாம் என் பெயர் தெரிந்திருக்கிறது. ஆஸ்கரின் அங்கீகாரம் இசையில் மட்டும் என்னை முன்னேற்றவில்லை.

படங்களை தயாரிப்பதிலும், விர்ச்சுவல் ரியாலிட்டி போன்ற தொழில்நுட்பங்களில் ஈடுபடுவதிலும் என்னை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றது. இதற்கான அனைத்து சுதந்திரமும் ஆஸ்கரின் வலிமையால் கிடைத்தது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்