செளந்தர்யா திருமணத்தில் ஆனந்த கண்ணீர் விட்ட தாய் லதா.. கன்னத்தை தடவிய ரஜினி.. நெகிழ்ச்சி புகைப்படம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

தனது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட நெகிழ்ச்சியான புகைப்படங்களை புதுப்பெண் செளந்தர்யா வெளியிட்டுள்ளார்.

ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் செளந்தர்யாவுக்கும், விசாகனுக்கும் இன்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

இத்திருமணத்தில் தமிழக முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து தம்பதியை வாழ்த்தினார்கள்.

இந்நிலையில் திருமணத்தில் எடுக்கப்பட்ட முக்கிய புகைப்படங்களை புதுப்பெண் செளந்தர்யா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் தனது மகன் வேத், கணவர் விசாகன் மற்றும் தன்னுடைய பெயரான செளந்தர்யா ஆகிய மூன்றையும் ஒட்டி, மூவரும் இனி ஒன்று என்பதை குறிப்பிடும் வகையில் பதிவிட்டுள்ளார்.

மேலும் விசாகன் தனக்கு தாலிக்கட்டும் புகைப்படத்தையும், செளந்தர்யாவின் தாய் லதா அவர் கையை பிடித்த படி ஆனந்த கண்ணீர் வடிப்பது போலவும், ரஜினி செளந்தர்யாவின் கன்னத்தை தொடுவது போலவும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் மகன் வேத் கிருஷ்ணாவை மடியில் வைத்துள்ள புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers