ரஜினி மகள் செளந்தர்யா-விசாகன் தம்பதிக்கு வைகோ கொடுத்த பரிசு என்ன தெரியுமா? வைரலாகும் புகைப்படம்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகரான ரஜினியின் மகள் செளந்தர்யாவின் திருமணத்திற்கு வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திருமண தம்பதிக்கு கொடுத்த பரிசு என்ன என்பது குறித்து தெரியவந்துள்ளது.

ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யாவுக்கும், தொழில் அதிபர் விசாகன் வணங்கா முடிக்கும் நேற்று அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் முன்னிலையில் கோலகலமாக திருமணம் நடைபெற்றது.

குறிப்பாக திருமண நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளார் வைகோ, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் என அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அப்படி கலந்து கொண்ட பிரபலங்கள் பலர் தங்கள் கொண்டு வந்த பரிசை தம்பதிக்கு கொடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செளந்தர்யா-விசாகன் தம்பதிக்கு கொடுத்த பரிசு தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது.

அவர் ஏதோ சிறிய புத்தம் ஒன்றை கொடுப்பது தெளிவாக தெரிந்திருந்தது, ஆனால் அது என்ன என்பது தெரியாமல் இருந்த நிலையில், தற்போது அவர் கொடுத்தது ஒரு திருக்குறள் தெளிவுரை புத்தகம் என்பது தெரியவந்துள்ளது.

தம்பதி இரண்டு பேருக்கும் தனித் தனியாக கொடுத்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...